பிரித்தானியா பள்ளிவாசலுக்குள் கத்திக்குத்து: முதியவர் படுகாயம்

0
279
elderly wounded Britain mosque tamil news

பிரித்தானியா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 80 வயது முதியவர் ஒருவர் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். elderly wounded Britain mosque tamil news

பிரித்தானியாவின் மன்செஸ்டர் நகரில் நேற்று, வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நிகழ்வில் இடம்பெற்றிருந்த நபரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞனொருவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனை வெறுக்கத்தக்க குற்றச் செயலாகக் கருத முடியவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக சாட்சியங்களை பதிவுசெய்ய முன்வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

tags :- elderly wounded Britain mosque tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************