விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!

0
643
Vijay asking story Vijayakanth son tamil news

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்காக, நடிகர் விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.Vijay asking story Vijayakanth son tamil news

விஜயகாந்தின் இளையமகன் சண்முகப்பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த “சகாப்தம்” படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை.

இருப்பினும் “மதுரவீரன்” எதிர்ப்பார்த்த அளவுக்கு வசூலித்தது. இதைத்தொடர்ந்து “தமிழன் என்று சொல்லடா” படத்தில் நடித்து வருகிறார் சண்முகப்பாண்டியன். இதில் விஜயகாந்தும் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், சண்முகப்பாண்டியனுக்கு டர்னிங் பாயிண்டு கொடுக்கும் வகையில் அவரை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நடிகர் விஜய். இதற்காக இயக்குநர்களிடம் சண்முகப்பாண்டியனுக்கு ஏற்றார்போல் கதை கேட்டு வருகிறாராம் விஜய்.

விஜய்யின் ”நாளைய தீர்ப்பு” படம் கைக்கொடுக்காத நிலையில் ”செந்தூரப்பாண்டி” மூலம் விஜய்க்கு உதவினார் நடிகர் விஜயகாந்த். இந்த நன்றிக்கடனுக்காக விஜய், சண்முகப்பாண்டியனுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி தர எண்ணியுள்ளாராம்.

தனது சொந்த செலவில் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் இசையமைப்பாளர், கேமராமேன் என பெரிய டெக்னிஷியன்களை பயன்படுத்தவும் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :-Vijay asking story Vijayakanth son