கர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..!

0
332
Lyric McHenry Dead body Found Hollywood Cinema tamil news

அமெரிக்காவில் நடிகையும், ஹாலிவுட் பட தயாரிப்பாளரின் மகளுமான லிரிக் மெக்ஹென்ரி அரை நிர்வாண கோலத்தில் சாலையோரம் அனாதையாக இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. Lyric McHenry Dead body Found Hollywood Cinema tamil news

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான 26 வயதுடைய லிரிக் மெக்ஹென்ரி, ஹாலிவுட் பட தயாரிப்பாளரான டக் மெக்ஹென்ரியின் மகள்.

லிரிக் கடந்த 6 ம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை கொண்டாடிய 3 மணிநேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

லிரிக் மெக்ஹென்ரி நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் பகுதியில் இருக்கும் தெருவோரம் லிரிக் சுயநினைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காலை 5 மணி அளவில் லிரிக் தெருவோரம் அனாதையாக அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உடனே லிரிக்கை பிரான்க்ஸ்-லெபனான் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

லிரிக் பிணமாகக் கிடந்த இடத்தில் அவருக்கு அருகே ஒரு பையில் போதைப் பொருள் இருந்தது. அதனால் அவர் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும், லிரிக் கர்ப்பமாக இருந்துள்ளார். லிரிக்கின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லிரிக் அவராக சாலையில் நடந்து சென்றபோது இறந்தாரா இல்லை ஏற்கனவே இறந்த லிரிக்கின் உடலை யாராவது அங்கு கொண்டு வந்து போட்டார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெவர்லி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பல ஹாலிவுட் பிரபலங்களின் பிள்ளைகளுக்கு லிரிக் நல்ல பழக்கமானவர். லிரிக் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், கர்ப்பமாக இருந்த என் மகள் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக தற்போதே கூறுவது சரி அல்ல. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடிவு செய்யட்டும் என்று லிரிக்கின் தந்தை டக் தெரிவித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Lyric McHenry Dead body Found Hollywood Cinema tamil news