‘மேயாத மான்’ இயக்குனருடன் கை கோர்க்கும் அமலா பால்

0
300
Amala Paul joins Meyatha Maan director tamil news

அரவிந்த் சாமியுடன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின், தற்போது தமிழில் விஷ்ணு விஷாலின் இயக்கத்தில் ‘ராட்சசன்’, கே.ஆர்.வினோத்தின் இயக்கத்தில் ‘அதோ அந்த பறவை போல’, அறிமுக இயக்குநர் தீபு ராமானுஜம் படம், மலையாளத்தில் பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் படம் என வரிசை கட்டி நிற்கிறது அவருக்கான படங்கள். Amala Paul joins Meyatha Maan director tamil news

இந்த வரிசையில் ‘ஆடை’ என்று இன்னுமொரு படமும் சேர்ந்துள்ளது. இந்தப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படமாம். ‘மேயாத மான்’ பட இயக்குனர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த தகவலை ரத்னகுமாரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘வி புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய,  பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார்.

படத்தில் நடிக்கவுள்ள ஏனைய நடிகர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Amala Paul joins Meyatha Maan director tamil news

எமது ஏனைய தளங்கள்