விரட்டி விரட்டி வெளுத்த வாஜ்பாய்!

0
671
Atal Bihari vajpayee kargil war History

1999 – ம் ஆண்டின் மே மாதம் கார்கில் பகுதியில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. Atal Bihari vajpayee kargil war History Tamil News

சுமார் 160 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டு நெடிதுயர்ந்திருந்த அந்த சாலை வழியாக பர்வேஷ் முஷாரபின் படைகள் உள்ளே ஊடுருவ தொடங்கியிருந்தன.

இந்திய துருப்புகள் காலி செய்துவிட்டு சென்ற அந்த குன்றுகளில் அடைக்கலம் புகுந்தனர் பாகிஸ்தானியர்கள்.

எவ்விதச் சலனமும் இன்றி ஊடுருவி இருந்தவர்கள் ஒரு சுபயோக சுபதினத்தில் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறார்கள். இந்திய வீரர்கள் சுதாரிப்பதற்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியாவுக்குள்ளும் ஆத்திரத்தை ஊட்டுகிறது. தகவல் உண்மையென்று அறிந்ததும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவிய எல்லைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை உடனடியாக அனுப்பி வைக்கிறார் பிரதமர் வாஜ்பாய். அதற்குள் 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர்.

தங்களுக்குச் சொந்தமான பகுதியை மீட்டெடுக்கத் காஷ்மீர் இளைஞர்கள் தன்னெழுச்சியாக புரட்சி செய்கின்றனர். இதில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென சத்தியம் செய்தது பாகிஸ்தான்.

உங்கள் நாட்டினர் எங்கள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர் என்று குற்றம் சாற்றிய இந்தியாவுக்கு கிடைத்த பதில் இது. இனிப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவர்களை விரட்டி விரட்டி வெளுப்பது என்ற முடிவுக்கு வருகிறது.

ஆப்பரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ஆட்டம் தொடங்கியது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது.

2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது இந்தியா. 26 மே 1999 அன்று இந்தியாவின் அதிரடித் தாக்குதல்களை சமாளிக்க முடியாததால் ஊடுருவியவர்களோடு பாகிஸ்தான் ராணுவமும் யுத்தக் களத்திற்கு வந்து சேர்ந்தது.

போர் நடக்கின்றது வெற்றி இலக்கை இந்தியா எட்டிவிடும் தூரத்தில் இருந்தது. இந்நிலையில் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நவாஸ் போரை நிறுத்தலாம் என்கிறார். காலம் கடந்து விட்டது என்று மறுத்துவிடுகிறார் வாஜ்பாய்.

யுத்தத்தின் அகோரம் தாங்க முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்கி செல்ல தொடங்கியது. இப்படியாக 70 நாட்களை கடந்த அந்த யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி பாகிஸ்தானியர்களை விரட்டி விரட்டி வெளுத்த ஒப்பில்லா தலைவன் வாஜ்பாய் ஆகும்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites