அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

0
312
Ajith plays Amitabh bachchan role tamil news

நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ”விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். Ajith plays Amitabh bachchan role tamil news

இப்படத்தை அடுத்து “தீரன் அதிகாரம் ஒன்று” பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

மேலும், அஜித்தை வைத்து இயக்குநர் வினோத் இயக்கும் படம் இந்தி ரீமேக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ”பிங்க்” படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

”பிங்க்” படத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Ajith plays Amitabh bachchan role tamil news