தீண்டத்தகாத விடயமல்ல செக்ஸ் – எக்ஸ் வீடியோஸ் ரியாமிகா

0
322
x videos tamil movie actress riyamika tamil news

சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் எக்ஸ் வீடியோஸ். இப்படத்தின் நாயகி ரியாமிகா தன் முதல் படத்தையே இவ்வாறு தெரிவு செய்தது துணிச்சலான விடயம் தான் என கோலிவுடே அலறுகிறது. x videos tamil movie actress riyamika tamil news

இது குறித்து அவரிடம் கேட்ட போது, எக்ஸ் வீடியோஸ் எனது முதல் படம் அல்ல. அப்படத்திற்கு முன், பிரஜின் நடித்த ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், ரசிகர்களிடையே என்னைப் பிரபலப்படுத்தியது ‘எக்ஸ் வீடியோஸ்’ தான். சொந்த ஊர் பெங்களூரு. படித்ததும் இப்போது வாழ்வதும் சென்னை. அம்மாவுக்கு இளம் வயதில் சினிமாவில் நடிக்க ஆசை. குடும்பச் சூழலால் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை.

ஆனால் சினிமா என்னை வரவேற்றது. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் எங்கள் குடும்ப நண்பர். அவர் மூலமாகத்தான் எனக்கு சினிமா தொடர்பு கிடைத்தது.

‘எக்ஸ் வீடியோஸ்’ திரைப்பட இயக்குனர் சஜோ சுந்தர் என்னை ஒப்பந்தம் செய்தபோது, என்னுடைய போர்ஷனை மட்டும் சொல்லி நடிக்க சம்மதிக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல் படத்திற்கு கமிட்டான பிறகுதான் படத்தின் டைட்டிலே என்னவென தெரியும். டைட்டிலைக் கேட்டதும் ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனா, அந்தப் படத்தில் நான் முழு ஈடுபாட்டுடன் நடித்ததை மறுக்க முடியாது.

திரையுலகில் என்னை பாராட்டினாலும், நெருங்கியவர்கள் அந்த மாதிரி படங்களில் நீ நடிக்கலாமா என விமர்சனம் பண்ணினார்கள். என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது தீண்டத்தகாத விடயமோ, பொது இடத்தில் பேசக்கூடாத விடயமோ இல்லை.

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்குக் காரணம், பெண்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான். எக்ஸ் வீடியோஸ் படத்தில் எனக்கு திருப்தி கிடைத்தது. ஆனாலும், அடுத்த படங்களில் முழுக்கதையையும் கேட்ட பிறகே கமிட் ஆவேன்.

Tags: x videos tamil movie actress riyamika tamil news

எமது ஏனைய தளங்கள்