விரைவில் பாடலை வெளியிடுவேன் – மடோனா

0
296
Premam movie fame madonna tamil news

பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் மடோனா செபாஸ்டியன். இவர் தமிழ் திரையுலகிலும் பிரபலமாகிவிட்டார். அண்மையில் வெளியான ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருந்தார். பல தடவைகள் யோசித்தே படங்களை மடோனா தேர்வு செய்கிறார். எல்லா படங்களையும் அவர் ஏற்பது இல்லை. Premam movie fame madonna tamil news

இது குறித்து அவரிடம் கேட்ட போது, மிகக் கவனமாகத் தான் நான் படங்களை தேர்வு செய்கிறேன். குடும்பம் மற்றும் நமக்கு பிடித்த விடயங்களுக்கு நேரம் செலவிடாமல் உழைத்து என்ன பலன்? என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் தேவை. கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக கன்னட படமொன்றில்  தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளேன்.

நான் ஆறு வயதில் இருந்து பாடுகிறேன். மியூசிக் பேண்ட் ஒன்று சொந்தமாகவும் வைத்துள்ளேன், விரைவில் தமிழ் பாடல் ஒன்றை வெளியிடவுள்ளேன்.

பல உணர்ச்சிகளை வெளிக்காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். முகத்தை மட்டும் காட்டிவிட்டு போகும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. எனக்கு ஜிம் செல்ல பிடிக்கும். அதற்காக ஒல்லியாக இருக்க விருப்பமில்லை, என தன்னைப் பற்றிய விடயங்களை கூறினார் மடோனா.

tags ;-Premam movie fame madonna tamil news

<<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்