பெண் மருத்துவரை கற்பழிக்க முயன்று தப்பி ஓடியவர் தவறி வீழ்ந்து மரணம்

0
413
Man attempts rape woman doctor Mumbai later jumps mall dies

(Man attempts rape woman doctor Mumbai later jumps mall dies)

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மருத்துவரை கற்பழிக்க முயன்ற ஒருவர் தப்பி ஓடிய போது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து பலியானார்.

இது குறித்து மும்பை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் மலாடு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முதல் மாடியில் செரியன் எலன் (60) என்பவர் வசித்து வருகிறார்.

அதே குடியிருப்பில் 2 வது மாடியில் பெண் மருத்துவர் ஒருவர் வசித்து வருகிறார். அந்த மருத்துவர் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்

அப்போது செரியன் எலன் குறித்த பெண் மருத்துவரை பின்தொடர்ந்து வந்தார்.

மருத்துவர் தனது வீட்டு கதவை திறந்து உள்ளே சென்ற போது, திடீரென செரியன் எலனும் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.

பின்னர் கதவை பூட்டி விட்டு பெண் மருத்துவரை கற்பழிக்க முயன்றார். இதனால் பெண் கூச்சலிட்டார்.

ஆத்திரம் அடைந்த செரியன் எலன் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து மருத்துவரின் தலையில் தாக்கினார்.

இதில், இரத்தம் கொட்டிய நிலையில் அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே செரியன் எலன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.

அருகில் இருந்த மண்டபத்துக்குள் நுழைந்த அவர் மாடியில் ஏறி சென்றார். அவரை அயலவர்கள் விரட்டி சென்றனர்.

அப்போது மாடியில் இருந்து அவர் தவறி வீழ்ந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

இது சம்பந்தமாக மும்பை பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயம் அடைந்த பெண் மருத்துவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

(Man attempts rape woman doctor Mumbai later jumps mall dies)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites