ஒரே நாளில் மும்பை மீனவர்களை லட்சாதிபதியாக்கிய மீன்!!

0
344
Mumbai Fishermen coughted GholFish one day millioner

(Mumbai Fishermen coughted GholFish one day millioner)

மும்பையில் உள்ள பால்கர் கடற்பகுதியில் சிக்கிய ஒரு அறிய வகை மீனால் ஒரே நாளில் 2 மீனவர்கள் லட்சாதிபதியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மும்பையை சேர்ந்த மீனவர் மகேஷ் மெகர் மற்றும் அவரது தம்பி பரத் ஆகியோர் இருவரும் தங்களது ‘சாய் லட்சுமி’ என்ற சிறிய படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

திரும்பும் வழியில் மும்பை பால்கர் கடல் பகுதியில் மூர்ப் என்ற இடத்தில் வலை வீசினர். அப்போது மற்ற மீன்களுடன் ‘கோல்’ எனப்படும் அரியவகை மீன் ஒன்றும் சிக்கியது.

அந்த மீன் சமையலின் போது மிகவும் சுவையாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இது மருத்துவ குணம் வாய்ந்தது. இதன் உடல் உறுப்புகள் மருத்துவ பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

மும்பை மீனவர்கள் மகேஷ், பரத் ஆகியோர் பிடித்த மீன் 30 கிலோ எடை இருந்துள்ளது.

இதற்கிடையே இவர்கள் ‘கோல்’ வகை மீன் பிடித்த தகவல் நேற்று மும்பை மீனவர்களிடையே காட்டுத்தீ போன்று பரவியது.

அதிகாலை மீன்கள் ஏலம் விடும் வேளை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏலம் முடிய இருந்த 20 நிமிடங்களில் மீனவர்கள் இருவரும் மீனுடன் அங்கு சென்றனர்.

அதை பார்த்த மீன் ஏற்றுமதியாளர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

முடிவில் அந்த மீன் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

அதன்மூலம் மீனவர்கள் இருவரும் ஒரே நாளில் லட்சாதிபதி ஆகினர். இதுகுறித்து மீனவர் மகேஷ் கூறும்போது, ‘ஒவ்வொரு மீனவரும் அதிர்ஷ்டம் தரும் ‘கோல்’ வகை மீன்கள் கிடைக்காதா என்ற ஆவலில் இருப்பார்கள்.

எங்களுக்கு இது கிடைத்ததன் மூலம் கடல் அன்னை லாட்டரியில் ஜாக்பாட் வழங்கி இருக்கிறாள்.

பல ஆண்டுகளுக்கு பிறகு எங்களுக்கு இந்த மீன் கிடைத்துள்ளது. அதன்மூலம் எங்களின் பணப் பிரச்சினை குறையும். படகு மற்றும் வலையை சரி செய்வேன்’ என்றார்.

‘கோல்’ வகை மீன்கள் மருந்துக்கு மட்டுமின்றி உணவு மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

(Mumbai Fishermen coughted GholFish one day millioner)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites