ஏறாவூரில் நகை கொள்ளையிட்டவர் ”பெண் பொலிஸா?”

0
537
woman police robbed jewelery shop Eravur town tamilnews

(woman police robbed jewelery shop Eravur town tamilnews)

ஏறாவூர் நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றில் தன்னை “பெண் பொலிஸ்“ என அறிமுகம் செய்து கொண்டு ஆபரணங்கள் வாங்குவது போன்று பாவனை செய்து நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்ணொருவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையி்ல், சி.சி.ரி.வி காணொளியில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு துரிதமாகச் செயற்பட்ட ஏறாவூர் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் சந்தேகத்திற்குரிய பெண்ணை நேற்று முன்தினம் மாத்தளை நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

மாத்தளை நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த அலோசியஸ் மெலின் டேனியல் (50) என்ற பெண்ணே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏறாவூர் நகைக் கடையில் திருடிய நகையை கதுறுவெல நகரில் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்ணுடன் கதுறுவெல நகருக்கு சென்ற பொலிஸார் திருடப்பட்டு விற்றதாக கூறப்பட்ட நகையை கைப்பற்றியதோடு அதனை வாங்கியவரையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அன்றைய தினம் சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

(woman police robbed jewelery shop Eravur town tamilnews)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites