உலகின் வெறுமையான விமான நிலையத்தை கையேற்கும் இந்தியா – சீனா மீது ஒரு கண்வைத்துள்ளது

0
418
srilankan government reworking mou hambantota airport deal india

(srilankan government reworking mou hambantota airport deal india)

உலகிலேயே வெறுமையான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கிறது இலங்கை.

ஹம்பந்தோட்டையில் உள்ள மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்த வரைவுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே வெறுமையான விமான நிலையம் என்று வர்ணிக்கப்படும் மத்தள மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையம் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய நிலையில் மே மாதம் போக்குவரத்தை நிறுத்தியது.

இதனாலோ என்னவோ உலகிலேயே வெறுமையான விமான நிலையமாகச் சித்திரிக்கப்படுகிறது.

வரைவுத்திட்டம்

இந்தியாவுடன் இணைந்து 241 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் மீண்டும் ஹம்பந்தோட்டை விமான நிலையம் இயக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மீள்கட்டமைப்பு செய்வதற்கான வரைவுத் திட்டம் குறித்து இந்திய அரசிடம் இலங்கை கலந்துரையாடியுள்ளது.

பேச்சுவார்த்தை

இதற்கான இறுதி வரைவு அறிக்கை இலங்கை அமைச்சரவை முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புக் குறித்துக் கேட்க முடிவு செய்யப்பட்டது.

இரு தரப்புக்குமிடையே இது தொடர்பாகப் பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்தியாவின் முடிவு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

வர்த்தக விரிவாக்கம் – திட்ட வரைவு விமான நிலைய கட்டுப்பாடு, போக்குவரத்து உரிமை மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளை இலங்கை அரசாங்கமே வைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.

ஆண்டுக்கு 1 பில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்கு லாகவமான இந்த விமான நிலையத்தில் 5 பில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டுக்குள் 50000 டன் சரக்குகளைக் கையாகவும், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை உயர்த்தவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு செய்யுமா இந்தியா

2017 ஆண்டு ஹம்பந்தட்டை மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை என்று தெரிவித்த இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தற்போது இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதாகக் தெரிவித்தார்.

இந்தியா சம்மதித்தால் 70 சதவீத பங்கை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.

வன் இந்தியா

(srilankan government reworking mou hambantota airport deal india)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites