2011 ஆம் ஆண்டில் 5 உயிர்களை காவுகொண்ட இரு ரயில்களே நேற்றிரவும் மோதியுள்ளன..!

0
843
rambukkana train accident New update

மலையக ரயில் மார்க்கத்தின் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெல இடையே பனலிய பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.(rambukkana train accident New update,Tamilnews, Today Tamil News, Global Tamil News)

விசாரணைகளின் ஊடாக, தவறு ஏற்பட்டுள்ள விதம் குறித்து ஆராய்ந்து அதனுடன் தொடர்புடையவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நேற்று ( (06) ) பிற்பகல் 4.35 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்குப் பயணித்த அலுவலக ரயில் சமிக்ஞை இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
https://www.youtube.com/watch?v=8iJgO4SKcws

அதேநேரம், கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட மற்றுமொரு அலுவலக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்​த குறித்த ரயிலுடன் மாலை 6.30 மணியளவில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 32 பேரும் குருநாகல், பொல்கஹவெல, றம்புக்கனை மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ரயில் விபத்து தொடர்பாக மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ரயில்கள் இரண்டும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அலவ்வ பிரதேசத்தில் பாரிய விபத்துக்குள்ளானவை என தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு பின்னால் வந்த மற்றுமொரு ரயில் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

அலவ்வ பிரதேசத்தில் இதற்கு முன்னரும் இதே போன்ற விபத்தே நிகழ்ந்துள்ளது. நேற்று ஏற்பட்ட விபத்துக்கும் குறித்த ரயிலில் உள்ள ஏதேனும் பிரச்சினையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அலவ்வ ரயில் விபத்தின் பின்னர் குறித்த ரயில் நல்ல முறையில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நேற்று ஏற்பட்ட பாதிப்புகள் குறைவாக காணப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:rambukkana train accident New update,rambukkana train accident New update,rambukkana train accident New update