மறைந்த கருணாநிதிக்காக தமிழில் இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி

0
234
President Maithripala condoled late CM Tamil Nadu Karunanidhi

(President Maithripala condoled late CM Tamil Nadu Karunanidhi)

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் ஜனாதிபதி பதிவொன்றை விடுத்துள்ளார்.

“தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, உடல்நல குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, இன்று மாலை உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(President Maithripala condoled late CM Tamil Nadu Karunanidhi)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites