இங்கிலாந்தில் விற்பனையாகும் பிளாஸ்டிக் முட்டைகோஸ்

0
304
Plastic cabbage sold England tamil news

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிளாஸ்டிக் அரிசியை போல, இங்கிலாந்தில் தற்போது பிளாஸ்டிக் முட்டைகோஸ் விற்பனை என்கிற தகவல் பரவி வருகின்றது. Plastic cabbage sold England tamil news

இங்கிலாந்தின் சோமர்செட் நகரைச் சேர்ந்த 52 வயதான டி மில்லி என்பவர், அங்கு உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் முட்டைகோஸ் வாங்கியுள்ளார். அதனை சமைக்க சென்ற போது, முட்டைகோஸில் பிளாஸ்டிக் வாடை வீசியுள்ளது. அதனுடைய இலைகளை வெட்ட முடியாத அளவுக்கு கடினமாக இருந்துள்ளது.

இதனால் இதன் மீது தீ வைத்தும் பார்த்த அவர், இதனை படமாக்கி தமது facebook இல் வெளியிட்டுள்ளார். இனிமேல் முட்டைகோஸை சூப்பர் மார்க்கெட்டில் வாங்க போவதில்லை என்றும் உள்ளூர் கடைகளில் காய்கறி வாங்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் முட்டைகோஸ் விற்பனை என்கிற செய்தி இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tags :- Plastic cabbage sold England tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************