பிரான்ஸில், தேவாலயத்தில் நுழைந்து பாதிரியாரின் கழுத்தை அறுத்த பயங்கரவாதி!

0
318
France church entered church killed priest's neck

பிரான்ஸில், தேவாலயம் ஒன்றுக்குள் நுழைந்து பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பயங்கரவாதி ஒருவனின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். France church entered church killed priest’s neck

Saint-Etienne-du-Rouvray இலுள்ள தேவாலயம் ஒன்றுக்குள் நுழைந்த 19 வயதுடைய Adel Kermiche மற்றும் Abdel Malik Petitjean எனும் இரு பயங்கரவாதிகள் பாதிரியார் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்திருந்தார்கள்.

இச்சம்பவம் ஜூலை 26, 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்த இருவரும் கொல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதி Abdel Malik Petitjean இன் உறவினர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவனிடமும் பயங்கரவாத தடயங்கள் சிக்கியுள்ளதாகவும், கடந்த 2016 ஆம் ஆண்டில் சிரியா செல்ல முற்பட்டுள்ளான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர், Saint-Etienne-du-Rouvray தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்பு Abdel Malik Petitjeanஐ தொடர்பு கொண்டதாக தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

tags :- France church entered church killed priest’s neck

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்