பங்குச்சந்தையில் அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!!

0
292
Apple company high profit margin stock market tamil news

1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் ஆப்பிள் 1 என்ற தனிநபர் பயன்படுத்தும் கணணியை வடிவமைத்தார். அதன்பின்னர் 1980-ல் இருந்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி சுமார் 50,000 சதவீதம் வளர்ச்சி என்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக உள்ளது. Apple company high profit margin stock market tamil news

2011-ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பிறகு ஆப்பிளின் சி.இ.ஓ-வாக பதவி ஏற்றுக்கொண்ட டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார்.

2006-ம் ஆண்டு 20 பில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையான ஆப்பிள் நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் லாபம் கிட்டியதாக அறிக்கை வெளியிட்டது.

ஜூன் 29 2007-ம் ஆண்டு ஐ-போனை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் கடந்த 3 வருடங்களில் 1,100 சதவீதம் வளர்ச்சியை எட்டியது.

கடந்த வருடம் 229 பில்லியன் அமெரிக்க டொலர் விற்பனை ஆனதைத்தொடர்ந்து சுமார் 48.4 பில்லியன் அமெரிக்க டொலர் லாபம் ஈட்டியதால் அமெரிக்காவிலேயே மிகவும் அதிகம் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் இடம் பெற்றது.

இந்தநிலையில், ஆப்பிள் நிறுவனம் நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டொலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டொலர் வரையில் சென்றது. இன்றைய பங்குச்சந்தை தொடங்கியதும் ஆப்பிளின் சந்தை மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது.

தற்போது அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டொலரை தொட்டுள்ளது.

இந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது இதுவே முதன்முறை ஆகும். கடந்த ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 41.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் என்ற பெயர் வரக்காரணம்

ஸ்டீவ் ஜாப்ஸ் , ஆரம்பகாலத்திலிருந்தே பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்று பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்தத் தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்குக் கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்தத் தோட்டம் தான்.

அந்த வசந்த காலத்தை நினைவு கூறும் விதமாக, தனது நிறுவனத்திற்கு “ஆப்பிள்’ என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்தத் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாராம் ஜாப்ஸ்.

tags :- Apple company high profit margin stock market tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்