இரண்டாவது போட்டியிலும் இலங்கையை தோற்கடித்த தென்னாபிரிக்கா

0
456
South Africa chased successfully second time series occasion

(South Africa chased successfully second time series occasion)

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியது.

42.5 ஓவர்களில் 06 விக்கட் இழப்புக்கு 246 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

தம்புள்ளையில் இடம்பெற்ற குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, இலங்கை அணி சார்பில் எஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 69 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.

தென் ஆபிரிக்கா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய பெஹலுக்வாயே (Phehlukwayo) மற்றும் இங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து, 245 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 42.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி 2-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.

(South Africa chased successfully second time series occasion)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites