பிரெஞ்சு தீயணைப்புத்துறையில் பணிபுரியும் பெண்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெறும் பாலியல் வன்முறைகள்!

0
318
Sexual violence against women French firefighters

பரிஸை சேர்ந்த தீயணைப்புப்படை அதிகாரிகள் மீது மூன்று பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. Sexual violence against women French firefighters

இவ் வழக்கில் முதல் குற்றச்சாட்டு கடந்த செப்டெம்பர் 2017 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. அதில் உயர் அதிகாரி ஒருவர் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களும் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பதிவாகியுள்ளன. Créteil நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.

Boulogne-Billancourt ஐ சேர்ந்த தீயணைப்பு படையினர் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக Le Monde பத்திரிகை தெரிவித்துள்ளது. இது தவிர, இந்த குற்றம் மறைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டில், தீயணைப்பு படையினர் 7 பேர் இதே போன்ற ஒரு வழக்கில் கைது செய்யப்படிருந்தனர். அப்போது அவர்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பிரெஞ்சு தீயணைப்புத்துறையில் 16 வீதமான பெண்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- Sexual violence against women French firefighters

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்