கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்

0
837
Shop removal Keppapulavu military camp

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முள்ளியவளை பொலிஸார் தடை விதித்துள்ளனர். (Shop removal Keppapulavu military camp)

கேப்பாப்புலவு பகுதியை சேர்ந்த ஒருவரினால் நடத்தப்பட்ட கடையே இவ்வாறு முள்ளியவளை பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

கேப்பாப்புலவு பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டு நிலையில், இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எண்ணெய் கடை ஒன்றினை வைத்து மீள்குடியேறிய குடும்பம் ஒன்று நடத்தி வந்தனர்.

இதனால் இராணுவத்தின் முகாமிற்கு பாதுகாப்பு இல்லை எனவும் இந்த கடை இந்தப் பகுதியில் இருப்பதால் இராணுவத்திற்கு ஆபத்தாக அமையும் என தெரிவித்து முள்ளியவளை பொலிஸார் குறித்த கடையை மூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

தமது காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களிலுள்ள தமது வாழ்வாதாரங்களை பெறுவதற்கு வழிவிடாது தாமே அனுபவித்துவருகின்றதாகவும் குறித்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக்குரிய நிலத்தில் கடன்களை பெற்று சிறியமுதலீட்டை செய்து குறித்த வியாபார நிலையத்தினை நடத்திவரும் நிலையில் இராணுவத்தின் முறைப்பாட்டில் பொலிஸார் தமது நடவடிக்கைக்கு தடைபோட்டிருப்பது கவலையளிப்பதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

இராணுவம் தமக்குரிய தமது காணிகளை விட்டு வெளியேறினால் இந்த அவலநிலை தமக்கு இருக்காது என்றும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Shop removal Keppapulavu military camp