கனடாவிற்கு உதவும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ!

0
284
America Mexico help Canada

ஒன்ராறியோவின் வடக்கு மற்றும வட – கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டு தீ பரவலை கட்டுப்படுத்த கனடாவின் ஏனைய மாகாணங்களுடன் அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன. America Mexico help Canada

அதன் பிரகாரம் இந்த தீயணைப்பு பணிகளில் உதவுவதற்காக மெக்சிக்கோவிலிருந்து நேற்று 104 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் 63 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக ஒன்ராறியோ இயற்கை வளங்கள் மற்றும் வனவளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றுள் 35 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்பாட்டினுள் அல்லது கண்காணிப்பினுள் உள்ள போதிலும், 28 இடங்களில் காட்டுத்தீ கட்டுப்பாட்டினை மீறி பரவி வருவதாகவும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒன்ராறியோவில் 775 காட்டு தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றினால் 1 இலட்சத்து 81 ஆயிரம் ஹெக்டேயர் வனப்பகுதி அழிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- America Mexico help Canada

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்