22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி

0
386
Amazon jungle 22 years Hunter Residing

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளில் இப்போதும் பல்லாயிரக்கணக்கான காட்டுவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். வெளியாட்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் நிர்வாணமாக அவர்கள் அடர்ந்த காடுகளில் சுற்றி திரிகிறார்கள்.Amazon jungle 22 years Hunter Residing

அமேசான் காடுகளை அழித்து விவசாய பண்ணைகளாக மாற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு பண்ணைகளை உருவாக்குபவர்கள் அந்த காடுகளில் வசிக்கும் காட்டு வாசிகளை கொன்று விடுகிறார்கள்.

இவ்வாறு அங்குள்ள ரொண்டோனியா பகுதியில் 1996-ம் ஆண்டு விவசாய பண்ணை உருவாக்கப்பட்ட போது அந்த இடத்தில் 7 பேர் கொண்ட காட்டுவாசிகள் வசித்து வந்தனர். அவர்களில் 6 பேரை விவசாய பண்ணை அமைத்தவர்கள் கொன்று விட்டனர்.

அதில் ஒருவர் மட்டும் தப்பினார். அங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் உள்ளது. அந்த காட்டுக்குள் அவர் 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

வெளியாட்களை கண்டால் காட்டுக்குள் உள்ளே ஓடி ஒளிந்து கொள்கிறார். அவர் புல்- புதர்களை கொண்டு சிறு குடிசை அமைத்துள்ளார். அங்கு தான் வசித்து வருகிறார்.

அவர் வசிக்கும் பகுதிக்கு யாரும் சென்று தொந்தரவு கொடுக்க கூடாது என்று பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. அவரது செயல்பாட்டை பிரேசில் நாட்டில் புனாய் குழுமம் என்ற அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சமீபத்தில் அவர் கோடாரி கொண்டு ஒரு மரத்தை வெட்டும் காட்சியை தூரத்தில் இருந்து வீடியோ மூலம் பதிவு செய்து இருக்கிறார்கள். அதை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

tags:- Amazon jungle 22 years Hunter Residing

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்