வரலாறு காணாத வெயிலால் தவிக்கும் ஜேர்மனி

0
308
Germany suffering unseen

சுட்டெரிக்கும் வெயிலால் வறண்ட நிலங்களும், காட்டுத் தீயும் ஒரு பக்கம், கிடைத்த வெயிலில் சூரியக் குளியல் போடும் செல்வந்தர்கள் மறுபக்கம், அறுவடை குறித்த கவலையில் விவசாயிகள் இன்னொரு பக்கம் என பல தரப்பினர் மீதும் வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜேர்மனியின் தட்பவெப்பநிலை.Germany suffering unseen

வடகிழக்கு ஜேர்மனியில் சமீப மாதங்களாக முற்றிலுமாக மழை இல்லாது, சதுர மீட்டருக்கு வெறும் 50 லிட்டர் மழை மட்டுமே கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தகிக்கும் வெயிலால் ஜேர்மனி முழுவதும் காட்டுத்தீயின் அபாயமும் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கிடையில், சாக்சோனி-ஆன்ஹால்ட் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால், தீயணைப்பு வீரர்கள், நீச்சல்குளங்கள் போன்ற இடங்களில் இருந்து எல்லாம் நீரை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வறட்சியால் ஏற்படும் தீ, விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பல விவசாயிகள் தங்கள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். வரும் மாதங்களில் பயிர்கள் விரைந்து முதிர்ச்சியடைந்து விடும். அதேநேரத்தில் மழைப் பற்றாக்குறை காரணமாக விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதற்கிடையில், ஏற்படும் திடீர் வெள்ளமோ பயிர்களை மொத்தமாக அழித்து விடும்.

உருளைக்கிழங்கு, கரும்பு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றுக்கு கோதுமையைவிட அதிகம் தண்ணீர் தேவை. ஆகவே ஜேர்மனியின் மக்காச் சோளப் பயிர்கள் அசாதாரண வறண்ட தட்பவெப்பநிலை காரணமாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளன.

அதீத வறட்சியானது மரங்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு அதிலிருந்து மீள மரங்களுக்கு நீண்டகாலம் பிடிக்கும். ஆனால் இதுபோன்று பல ஆண்டுகள் தொடர்ந்து வறட்சி நிலவினால் அந்தத் தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போல் அவை தங்களை மாற்றிக்கொள்ளும்.

ஆனால், மரங்கள் எல்லாம் அழிந்து சப்பாத்திக் கள்ளி நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தவிர்க்க சில ஜேர்மன் நகரங்களில் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுமாறு தங்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

tags :- Germany suffering unseen

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்