பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு

0
582
Private Bus Strike Tamil News

பெற்றோல் விலைக்கு ஏற்ற வகையில் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். (New announcement bus fares increase)

பிட்ட கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் இன்னும் மக்களிடம் பிரசித்தப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் விலை சூத்திரம் மக்களின் கவனத்திற்காக அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் பெற்றோல் விலைக்கு ஏற்ற வகையில் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அண்மையில் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் இரண்டு வருடங்களுக்கு பஸ் கட்டண அதிகரிப்பை கோர முடியாது என்றும் தனியார் பஸ் சங்கத்தினருடனான ஒப்பந்தத்திற்கு அமைய தற்போதைக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 102 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நட்டமாக அதனை கருத முடியாது. முன்னைய ஆட்சியின் போது விற்பனை செய்யப்பட்ட பெற்றோலின் விலையை நாம் இன்னும் மிஞ்சவில்லை.

முன்னைய ஆட்சியை பார்க்கிலும் குறைவான விலைக்கே பெற்றோலை விற்கின்றோம். எனினும் உலக சந்தையில் பெற்றோலின் விலை குறையும் மக்களுக்கு அந்த சலுகையை வழங்குவோம்.

நாட்டில் மொத்தமாக 52 இலட்சம் குடும்பங்கள் வாழ்வதுடன் 72 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதில் 40 இலட்சம் மோட்டார் சைக்கிள்களும் 12 இலட்சம் முச்சக்கர வண்டிகளும் 8 இலட்சம் கார்களும் ஒரு இலட்சம் பஸ்களும் 4 இலட்சம் வேன்களும் 3 இலட்சத்து 75 ஆயிரம் வரையான லொறிகளும் உள்ளன.

எமது அரசாங்கத்தின் பெற்றோல் விலை அதிகரிப்பினால் முன்னைய காலங்களை விட வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு இலாபம் உள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; New announcement bus fares increase