காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இராணுவத்திடமும் விசாரணை!

0
498

இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில், அவர்களது உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது. Government Missing People Office Inquiring Military Officers

இதன்படி இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகள் இடம்பெறும்.

இந்நிலையில் உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும், அதற்கென முறையான திட்டமொன்று அவசியமெனவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி கட்டளைத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயமசூரிய மற்றும் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரிடம் இறுதி யுத்தத்தின்போது பலர், பாதுகாப்புத் தரப்பிடம் சரணடைந்தனர்.

இந்த நிலையில், காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites