தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு

0
1088
3 million Compensation boy fell dead lotus tower

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(3 million Compensation boy fell dead lotus tower)

தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த எட்டாம் திகதி, தாமரை கோபுரத்தின் 16 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

தாமரை கோபுரத்தில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்ற நிலையிலேயே கீழே வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் உயிரிழந்த இளைஞனுக்கு காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு எனபனவாக 30 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

குறித்த பணத்தை உயிரிழந்த நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

tags :- 3 million Compensation boy fell dead lotus tower

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites