Type to search

பளபளப்பு தரும் பச்சரிசி பாயாசம்…!

FOOD

பளபளப்பு தரும் பச்சரிசி பாயாசம்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Sweet Pacharisi Payasam Recipe Tamil)

தேவையான பொருட்கள் :
* பச்சரிசி – 1/4 கப்
* வெல்லம் பொடித்தது – 1 கப்
* முந்திரி – 25 கிராம்
* தேங்காய்த்துருவல் – 2 கப்
* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
* நெய் – 1 டீஸ்பூன்
* தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன் (சிறிய துண்டுகளாக)

செய்முறை :
* அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.

* தேங்காயை துருவி வடித்து வைத்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும்.

* சற்று கெட்டியாகும் வரும்வரை, கிளறிக்கொண்டே இருக்கவும்.

* பின்னர் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை விட்டு, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.

* பாயாசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும்.

* ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் முந்திரியை போட்டு சிவக்க வறுத்து பாயாசத்தில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

* சுவையான சுலபமான பச்சரிசி பாயாசம் தயார்.

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Sweet Pacharisi Payasam Recipe Tamil

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *