Home India மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் : ஆர்பிஎப் வீரருக்கு அரிவாள் வெட்டு!

மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் : ஆர்பிஎப் வீரருக்கு அரிவாள் வெட்டு!

0
மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் : ஆர்பிஎப் வீரருக்கு அரிவாள் வெட்டு!

incident happened Murmarket railway station cut sickle RPF player

சென்னை மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 4 வழிப்பறிக் கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட போது குற்றவாளியை பிடிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை வீரரை கொள்ளையர்களில் ஒருவன் அரிவாளால் வெட்டினான், இச்சம்பவம் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடந்துள்ளது,

பயணிகளிடம் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி பணம் பொருட்களை கேட்டு மிரட்டியபோது பயணிகள் பயத்தில் அய்யோ, காப்பாத்துங்க என்று கூச்சலிட்டு சுற்றி இருக்கும் பயணிகள் மற்றும் ரோந்து பணியில் இருந்த (ஆர்.பி.எப்) என அனைவரின் கவனத்தையும் கொள்ளையர்கள் மீது கொண்டுவந்தார்கள், அப்போது ரோந்து பணியில் இருந்த (ஆர்.பி.எப்) யோகேஷ்குமார் துணிச்சலாக களம் இறங்கி கொள்ளையனை பிடிக்க முயற்சித்தபோது மற்றொரு கொள்ளையன் மறைத்து வைத்திருந்த அரிவாளாலை எடுத்து யோகேஷ்குமாரின் தலையில் வெட்டினான், அப்போதும் விடாமல் கொள்ளையர்களில் விஜய்(21) என்கின்ற ஒருவனை மடக்கி பிடித்தார், மற்ற மூவரும் தப்பி ஓடிவிட்டனர்,

பிடிப்பட்ட கொள்ளையனிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் மற்ற கூட்டாளி கொள்ளையர்களை பற்றி காவல்துறை அதிகாரி கொள்ளையன் விஜயிடம் விசாரித்து வருகின்றனர்,

மேலும் அரிவாள் வெட்டால் காயமடைந்த (ஆர்.பி.எப்) யோகேஷ்குமாரை போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

More Tamil News

Tamil News Group websites :