இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஸ்டெனிஷ்காயின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணியிடம், இந்திய அணியை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக ஸ்டெனிஷ்காய் தெரிவித்த கருத்து விமர்சனத்தக்கு உள்ளாகியிருந்தது.
ஆனால் தற்போது அவரின் கருத்துக்கு தினேஷ் கார்த்திக் பதில் கருத்தை வெளியிட்டுள்ளார்.
“அவர் (ஸ்டெனிஷ்காய் ) என்ன சொன்னார் என்பது தொடர்பில் எனக்கு சரியாக தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியை விட எங்களின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல. உள்ளூரில் நடைபெறும் நான்கு நாள் போட்டிகளில் அதிகமாக விளையாடியுள்ளனர். குல்தீப் யாதவ் விளையாடிய நான்கு நாள் போட்டிகள் அளவிற்கு கூட ஆப்கானிஸ்தான் வீரர்கள் நான்கு நாள் போட்டிகளில் விளையாடியதில்லை.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அனுபவமே வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமையும். அனுபவத்தை அவ்வளவு இலகுவாக பெற்றுக்கொள்ளவும் முடியாது” என பதிவிட்டுள்ளார்.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Dinesh Karthik vs Afghanistan news Tamil, Dinesh Karthik vs Afghanistan news Tamil