ஆசிய கிண்ண தொடருக்கான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா எளிதாக வெற்றியை பெற்றுள்ளது. india beat pakistan 8 wickets asian cup 2018,pak vs india,asia cup live score, tamil sports news, tamil news
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை பல தரப்பு கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இமாம்-உல்-ஹக் மற்றும் பகர் சமான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த போட்டி தொடங்கிய முதலே இந்திய அணி சிறப்பாக ஆடத்தொடங்கியது.
இந்திய அணி வீரர்கள், புவனேஷ்குமார் , கேதர் ஜாதவ், பும்ரா, குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அவர்களது பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் 43.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.
இதில் இந்திய அணி சார்பாக புவனேஷ்குமார் , கேதர் ஜாதவ் தலா 3 வீக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு வீக்கெட்டையும் கைப்பற்றினர்.
163 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் தவான் நிலைத்து நின்று ஆடினர்.
ஆட்டத்தின் 13.1வது ஓவரில் 52 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷிகெர் தவான் 46 ஓட்டங்களில் பஹீம் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதை அடுத்து கள்மிறங்கிய ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் விக்கெட்டுகள் எதுவும் போகாமல், இந்த இணை 164 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தது.
அம்பத்தி ராயுடு 31 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 31 ஓட்டங்களுடன் கடைவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சதாப் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். Tamil Sports News
india beat pakistan 8 wickets asian cup 2018
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news