பதவியேற்பு விழாவில் பிரிட்டிஷ் ராணியை அவமதித்த ஆஸி பழங்குடியினப் பெண்!

0
645

அவுஸ்திரேலியாவின் பழங்குடியின பெண் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத்தை அவதூறு செய்யும் வகையில் வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.

செனட்டராக பதவிப்பிரமாணம் செய்த செனட்டர் லிடியா தோர்ப் என்ற பழங்குடியின பெண்ணே இவ்வாறு பிரித்தானிய மகாராணியை இழிவு படுத்தி உள்ளார்.

கனடா ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளின் அரச தலைவராக பிரித்தானிய மஹாராணி கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா பசுமை கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தோர்ப் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் போது வாசிக்கப்பட வேண்டிய வாசகங்களை மாற்றி வாசித்துள்ளார்.

பிரித்தானிய மகாராணியை இழிவுபடுத்து கூடிய வகையில் அவர் பதவிப்பிரமாண வாசகங்களை வாசித்துள்ளார். இதன் போது எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவிப்பிரமாணம் உரிய வகையில் செய்யப்படாவிட்டால் செனற்றாக பதவி வைக்க முடியாது என சக செனாட்டர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பதவிப் பிரமாண நிகழ்வில் மஹாராணியை இழிவுபடுத்திய ஆஸி பழங்குடியினப் பெண் | Indigenou Senator Queen Elizabeth Ii Colonizer

அதன் பின்னர் மீண்டும் பிரித்தானிய மகாராணியை இழிவுபடுத்தும் வாசகங்களை நீக்கி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்சீமை தாங்கிய இரண்டாம் எலிசபத் மஹாராணி என்ற வார்த்தைக்கு பதிலாக காலணித்துவ மஹாராணி என தோர்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.