ஹாலிவுட் தயாரிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ரத்து: நியூயார்க் மேல்முறையீடு நீதிமன்ற தீர்ப்பு

0
39

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை ரத்து செய்து மற்றுமொரு விசாரணைக்கு உத்தரவிட்டது.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 68) தன்னிடம் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக‘MeToo’வில் முறைப்பாடு செய்யப்பட்டது.

#MeToo என்றால் என்ன?

#MeToo என்பது “நானும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டேன்” என்ற அர்த்தத்தோடு பகிரப்படும் ஒரு சொல்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்திய ஆண்களுக்கு எதிராக பெண்கள் முன்னெடுத்த ஒரு இணைய போராட்டமே இந்த #MeToo. இந்த போராட்டத்தை Alyssa Milano என்ற அமெரிக்க நடிகை முன்னெடுத்தார்.

2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15-ஆம் திபதி முன்னெடுக்கப்பட்ட இந்த hashtag இயக்கம் அமெரிக்காவில் மட்டுமில்லாமல் இந்தியா உட்பட பல நாடுகளில் தாக்கம் செலுத்தியது.

சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்களில் சுமார் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர் metoo hash tag ஐ பதிவிட்டு தமக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை பதிவிட்டனர்.

இதன்போது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

குற்றவாளி என நிருபனம்

பாலியல் வன்கொடுமை தொடர்பில் 2020 ஆம் ஆண்டு ஹார்வி வெய்ன்ஸ்டீ குற்றவாளி என நிருபிக்கப்பட்டதுடன் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் “மோசமான செயல்களின் சாட்சிகளின் சாட்சியத்தை அனுமதிக்கக்கூடாது” என நியூயோர்க் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (26) தீர்ப்பளித்துள்ளது.

அவர் தனது தந்திரத்தால் பாலியல் செயல்பாடுகளை மறுத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் “நாங்கள் எச்சரிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றோம். “இது ஒரு நியாயமற்ற விசாரணை என்றே கூறிவருகின்றோம்” என வெய்ன்ஸ்டீனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தகவல் தொடர்பு துணை இயக்குநரான எமிலி டட்டில் தெரிவித்துள்ளார்.