நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

0
34

தென் மாகாணத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் மீது உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி, மாவட்ட நீதிபதியின் மைத்துனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட நீதிபதியின் செல்லப் பூனை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாகவும், சம்பவத்திற்குப் பிறகு நீதிபதியின் மனைவி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று மாவட்ட நீதிபதி தனது மனைவியுடன் உப பொலிஸ் பரிசோதகராக இருக்கும் தனது மைத்துனரின் வீட்டிற்கு செல்ல பூனையை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது மாவட்ட நீதிபதி வௌியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது செல்லப் பூனை காணாமல் போனதைத் தொடர்ந்து ஏற்பட்ட காரசாரமான உரையாடலின் போது உப பொலிஸ் பரிசோதகர் அவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், நீதிபதி அக்மீமன பொலிஸாரிடம் தொலைபேசியில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, பொலிஸ் குழுவொன்று வீட்டுக்கு வந்து சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்த போது, ​​நீதிபதியின் மனைவி, தனது நெஞ்சு பகுதியில் வலிப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் அதை நீதிபதி பெரிதாகக் கவனிக்காமல் வாக்குமூலம் அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலத்தை வழங்கிய நீதிபதி வீட்டை விட்டு வெளியேறியதுடன் சந்தேகத்தின் பேரில் உப பொலிஸ் பரிசோதகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் நீதிபதியின் மனைவியின் உடல் நிலை மோசமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.