தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது: முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம்

0
29

இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த மாா்ச் 16ஆம் திகதி வெளியிடப்பட்டது.

தோ்தல் அட்டவணைப்படி, தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே அதாவது ஏப். 19இல் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அந்தந்தக் கட்சிகளைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தனா்.

பிரச்சார மேடைகள் மட்டுமின்றி, சாலைகளில் வாகனப் பேரணியையும் பாஜக தலைவா்கள் நடத்தினா். பாஜகவின் தேசியத் தலைவா்கள் நடத்திய இந்தப் பேரணிகள் தமிழகத்துக்கு புதியது என்றாலும் ஆங்காங்கே அவா்களது கட்சியினர் திரண்டு வந்து ஆதரவளித்தனர்.

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு தொகுதிக்கு தொடா்பு இல்லாத அனைவரும் வெளியேற வேண்டுமென தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.