இஸ்ரேல் மீது ஈரான் தொடங்கிய அதிரடி தாக்குதல்

0
154

ஸ்ரேலை குறிவைத்து ஈரானிய ஆளில்லா விமானம் தாக்கும் அச்சத்தின் மத்தியில் எகிப்தின் வான் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எகிப்தின் இராணுவ ஜெனரல் கமாண்ட் நிலைமையைக் கண்காணிக்கவும், நாட்டின் வான்வெளி தொடர்பாக தேவையான முடிவுகளை எடுக்கவும் ஒரு குழுவை அமைத்துள்ளதாக எகிப்திய இராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர், மேலும் உறுதியற்ற தன்மை மற்றும் பதற்றம் போன்ற காரணிகளில் இருந்து அப்பகுதியையும் மக்களையும் காப்பாற்ற “மிகக் கட்டுப்பாட்டை” கடைப்பிடிக்குமாறு எகிப்திய வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஈரான் இஸ்ரேலுக்கு தாக்குதல் எச்சரிக்கையினை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளதுடன் இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் ட்ரோன்கள் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் நேரடி தாக்குதல் இதுவென்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்ட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

எனினும், இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.