நுவரெலியாவில் ட்ரோன் மூலம் திரவ உரங்கள், பூச்சிக்கொல்லிகள் விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

0
59

நுவரெலியாவில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரவ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விசிறும் பணிகள்  இடம்பெற்று வருகின்றன.

சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொழில்நுட்ப விவசாய முறை வெற்றியடைந்துள்ளதாகவும், தொழில்நுட்ப முறை மற்றும் கருவிகளை பயன்படுத்தி, திரவ உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாகுபடி நிலத்தில் தெளித்து அதிக வருமானம் ஈட்ட முடியும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

நுவரெலியா வரலாற்றில் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தினூடாக திரவ உரம் தெளிப்பதை ஆரம்பித்துவைத்த இளம் விவசாயி அரவிந்த பண்டார இது தொடர்பாக தெரிவிக்கையில், 

புதிய தொழில்நுட்பத்துடன் இவ்வாறான விவசாயப் பயணத்தை மேற்கொண்டால் இளைஞர்கள் செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. எப்போதும் ஆர்வத்துடன் விவசாயப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, ஏக்கருக்கு தெளிக்கும் மருந்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் திரவ உரங்களின் விலையை குறைக்கக்கூடியது இந்த தொழில்நுட்ப முறை. 

நுவரெலியாவில் மூன்று ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் அரசின் தலையீட்டின் மூலம் பயனடைவார்கள். இயற்கை முறையிலும் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றார்.