எதிர்கட்சியினர் சகலரும் ஒன்றிணைய வேண்டும்: மோடியை தோற்கடிக்க அரசியல் நகர்வு

0
64

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளுவதற்கு எதிர்க்கட்சியினர் சகலரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை டெல்லி மாநில நிதியமைச்சர் ஆதிசி (Atishi) முன்வைத்துள்ளார். எதிர்த்தரப்பினரை ஆளும் பாஜக தரப்பு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்துவருகின்றது.

அந்த வகையில் கடந்த வாரம் டெல்லி முதலமைச்சர் அரவிந் கஜரிவால் (Arvind Kejriwal) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரவிந் கஜரிவால் தொடர்ச்சியாக மோடி அரசாங்கத்தினை விமர்சித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து எதிர்கட்சியினைச் சேர்ந்த 150 தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை எதிர்க்கட்சியினைச் சேர்ந்த 27 முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டி தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரவிந் கஜரிவாலின் கைதைக் கண்டித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுவரும் நிலையில் தமது பலத்தினை காண்பிப்பதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடக்கவிருக்கும் தேர்தலானது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அரசியலமைப்பினை பாதுகாப்பதற்கு ஏற்றது எனவும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை எதிர்கட்சியினருக்கு எதிரான விசாரணைகள் சட்டரீதியானவை எனவும் அரசியல் பழிவாங்கல் இல்லை எனவும் பாஜக தெரிவித்துள்ளது.