விஜய்யின் கடைசி படம் குறித்து பேசிய வெற்றிமாறன்!

0
62
Fashionably late: South superstar Vijay got a million followers within an hour of joining Instagram. His first post was a photo of himself—with a rakish air and a stylishly greying beard—from the sets of his upcoming film, Leo. “Hello Nanbas and Nanbis,” he captioned it. He has over four million followers on Twitter. Leo is an action-thriller directed by Lokesh Kanagaraj, and co-starring Trisha and Sanjay Dutt. It releases in October.

நடிகர் விஜய்  அரசியல் செல்வதால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பல கேள்விகள் எழுந்து வருகிறது. வெற்றிமாறன் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்த நிலையில், இதுகுறித்து அவரே பேசியுள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் ‘தளபதி விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது நீங்கா தான் என தகவல் பரவலாகி வருகிறது அது உண்மையா’ என தொகுப்பாளினி கேள்வி கேட்டார்.

இதற்கு ‘நானும் அந்த செய்தியை பார்த்தேன், அவரும் அந்த செய்தியை பார்த்திருப்பார். தெரியவில்லை என்ன நடக்கப்போகிறது என்று’ என பதில் கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து வெற்றிமாறன் பேசிய விஷயம் ஒரு பக்கம் வைரலாகி வந்தாலும் கூட, மறுபக்கம் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது ஹெச். வினோத் தான் என்றும் இது 99% சதவீதம் உறுதி என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.