உலகளவில் திடீரென முடங்கிய பேஸ்புக்செயலி..

0
80

பேஸ்புக் செயலி சற்று முன்னர் செயலிழந்துள்ளது. பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.

Facebook மட்டுமன்றி Instagram மற்றும் Messenger ஆகியவையும் தற்போது இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக இவ்வாறு முகநூல் சேவைகள் முடங்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு Facebook மட்டுமன்றி Instagram மற்றும் Messenger ஆகியவையும் முடங்கியுள்ள நிலையில் பயனர்கள் அனைவரும் x தளத்தை நாடி செல்வதும் குறிப்பிடத்தக்கது.   

இன்று இரவு 10 மணி அளவில் திடீரென முகநூல் பக்கம் முடங்கியது. தொடா்ந்து 30 நிமிடங்கள் வரை முகநூல் வேலை செய்யாததால் பயன்பாட்டாளா்கள் சற்று குழப்படைந்தனா்.

பின்னா் சில நேரங்கள் கழித்து முகநூல் வேலை செய்ய தொடங்கியது.