மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

0
125

மன்னாரின் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்னந்தோப்பு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் குச்சவெளியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தலைமன்னாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் வயோதிப பெண்ணின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

பொலிஸார் விசாரணை

குறித்த சிறுமியின் பெற்றோர் புத்தளம் மாவட்டம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், சிறுமி தனது சகோதர,சகோதரிகளுடன் தலைமன்னாரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நிலையில் காணாமல்போயிருந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறுமியின் பாட்டி வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, அப்பகுதி மக்களின் உதவியுடன் சிறுமியைத் தேடிய பொலிஸார், சிறுமியின் பாட்டி வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தென்னந்தோப்பில் சடலமாக மீட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய, சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.