அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி.. 21 பேர் காயம்

0
96

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கன்சாஸ் நகரத்தில் இடம்பெற்ற அணிவகுப்பின் இறுதியிலேயே superbowl parade துப்பாக்கி சூட்டுசம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒருமில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வில் இறுதியில் இடம்பெற்ற வன்முறையை தொடர்ந்து மக்கள் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர்.

அமெரிக்காவில் பரபரப்பு; துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் காயம் | America 21 People Were Injured In The Firing

துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து 22 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பல சிறுவர்கள் உள்ளனர் எட்டுபேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்த அதிகாரிகள் , மூவரை கைதுசெய்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த பெண் ஒரு டிஜே என தகவல்கள் வெளியாகியுள்ளன.