காதலின் அடையாளம் ரோஜா: ஒவ்வொரு ரோஜா நிறத்துக்கும் என்ன அர்த்தம் தெரியுமா?

0
175

பெப்ரவரி மாதம் தொடங்கிவிட்டாலே அது காதலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகத்தான் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அதாவது, பெப்ரவரி 7ஆம் திகதியன்றே ரோஸ் தினத்துடன் காதலர் தின கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடுகிறது.

காதலுக்கும் ரோஜாவுக்குமான பந்தம் காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒன்று. ஏனென்றால் காதலின் அடையாளமாக ரோஜா பூ என்றுமே முதலிடம் வகிக்கிறது.

Oruvan

ரோஜாவை வெறும் காதலர்கள் மட்டுமே பரிமாறிக்கொள்வதல்ல. அதை நமக்கு பிடித்த அனைவருக்கும் பரிசாகக் கொடுக்கலாம். ரோஜாக்கள் பல வண்ணங்களில் உள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு நிற ரோஜாவுக்கும் பின்னாள் உள்ள அர்த்தத்தைப் பார்ப்போம்.

சிவப்பு ரோஜா

Oruvan

ரோஜாக்களில் மிகவும் முக்கியமானது சிவப்பு நிற ரோஜா. இது காதலையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த சிவப்பு நிற ரோஜாக்களில் ஒற்றை ரோஜா அல்லது பூங்கொத்தை தனது காதலி அல்லது காதலனுக்கு பரிசாக வழங்கலாம்.

ஒரேஞ்ச் நிற ரோஜா

Oruvan

ஒரேஞ்ச் நிற ரோஜா பெஷனை வெளிப்படுத்துவதாக உள்ளது. உணர்வு ரீதியான பிணைப்பைத் தாண்டி உங்கள் உறவின் மீது எவ்வளவு passionனாக இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். உங்கள் விருப்பத்துக்குரியவர்களுக்கு நீங்கள் ஒரேஞ்ச் நிற ரோஜாவை பரிசளிக்கும்போது நீங்கள் உறவில் அடுத்த கட்டத்துக்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பீச் நிற ரோஜா

Oruvan

இந்த பீச் நிற ரோஜா காதலைக் கூற வெட்கப்படுபவர்களுக்கானது. நீங்கள் ஒருவரை மறைமுகமாக நேசிக்கிறீர்கள் ஆனால், அவர்களிடம் உங்கள் காதலைச் சொல்ல தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தால் இந்த பீச் நிறம் உங்களுக்கு கைகொடுக்கும்.

வெளிர் ஊதா நிற ரோஜா

Oruvan

முதல் பார்வையிலேயே காதல் கொண்டவர்களுக்கானது இந்த வெளிர் ஊதா நிற ரோஜா. அதாவது, லவ் எட் ஃபர்ஸ்ட் சைட் என்று அர்த்தப்படும். இந்த வகை ரோஜாக்கள் மிக மிக அரிதானது மற்றும் அழகானது.

மஞ்சள் நிற ரோஜா

Oruvan

இந்த மஞ்சள் நிற ரோஜா காதலுக்கு அல்ல நட்புக்கானது. அதாவது, வாழ்நாள் முழுவதும் உடன் வரப்போகும் நண்பர்களுக்கு இந்த மஞ்சள் நிற ரோஜா சரியாக இருக்கும்.

இளஞ்சிவப்பு நிற ரோஜா

Oruvan

ஒருவர் மீதிருக்கும் நன்றியுணர்வையும் ரசனையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது இந்த இளஞ்சிவப்பு ரோஜா. ஒருவர் மீது கொண்டிருக்கும் மரியாதையையும் அபிமானத்தையும் வெளிப்படுத்த வேண்டுமானால் இந்த ரோஜா உதவும்.

வெள்ளை நிற ரோஜா

Oruvan

பொதுவாகவே வெள்ளை நிறம் தூய்மை மற்றும் விசுவாசத்தைக் குறிக்கும். மேலும் இந்த வெள்ளை நிற ரோஜாக்கள் அமைதி மற்றும் இளமையான காதலின் அடையாளமாக இருக்கிறது. காதலர் தினத்தன்று நீங்கள் யாருக்காவது வெள்ளை நிற ரோஜா கொடுத்தால் நீங்கள் அவர் மீது விசுவாசத்துடன் இருக்கிறீர்கள் என்றும் எதிர்காலத்தை அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறீர்கள் என்றும் அர்த்தப்படும்.