நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழ டீ..

0
124

பொதுவாக குளிர்காலங்களில் இருமல், சளி பிரச்சினை வர வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என சிலர் மாத்திரைகள் எடுத்து கொள்வார்கள்.

ஆனால் மாத்திரைகளை விட வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு வைத்தியம் செய்வதால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம். அப்படியாயின் இருமல், சளி பிரச்சினையை விரட்டியடிக்கும் மாதுளைப்பழ டீ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மாதுளை தோலை வெயிலில் நன்றாக உலர அதனை கொண்டு டீ போட்டு குடித்தால் இருமல் பிரச்சினைக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் மாதுளம் பழ தோல் டீ எப்படி செய்யலாம் என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் – ஒரு லிட்டர்
  • மாதுளை தோல் – மூன்று இன்ச்
  • தேன்- ஒரு தேக்கரண்டி

செய்முறை

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழ தோல் டீ: தினமும் குடிக்கலாமா? | Benefits Of Drinking Pomegranate Peel Tea

முதலில் நன்றாக நீரை கொதிக்க விடவும். பின்னர் அதில் மாதுளை தோலை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்னர் டம்பளரில் ஊற்றி பரிமாறலாம். நாள் முழுவதும் கூட குடிக்கலாம். சுவை தேவை என்றால் கொஞ்சமாக தேன் கலந்து கொள்ளலாம்.

நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழ தோல் டீ: தினமும் குடிக்கலாமா? | Benefits Of Drinking Pomegranate Peel Tea

முக்கிய குறிப்பு

மாதுளை தோல் நன்றாக காய வைக்கப்பட்டதாக இருப்பது முக்கியம். இதனை போத்தல்களில் அடைத்து வைத்து களஞ்சியப்படுத்தலாம்.