தடை செய்யப்பட்ட திமிங்கிலத்தின் வாந்தியுடன் சிக்கிய நபர்கள்!

0
120

நாட்டில் விற்கவோ அல்லது வியாபாரம் செய்யவோ தடைசெய்யப்பட்டுள்ள மிதக்கும் தங்கம் (திமிங்கிலத்தின் வாந்தி) என அழைக்கப்படும் அம்பருடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (06) தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசங்களில் மிரிஸ்ஸ குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கிலோ 500 கிராம் அம்பர் கைப்பற்றப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட திமிங்கிலத்தின் வாந்தியுடன் சிக்கிய நபர்கள்! | Vomit Forbidden Whale Illegal To Harvest And Sell

 சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட திமிங்கிலத்தின் வாந்தி

மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட தற்போதைய சந்தைப் பெறுமதியினை கொண்ட அம்பருடன் பயணித்த 25-30 வயதுக்கும் இடைப்பட்ட நகுலுகமுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழிந்து வரும் விலங்கினமான திமிங்கலங்களின் உடலில் இருந்து வெளியாகும் விந்தணுக்கள் மற்றும் வாந்தி என்பவற்றால் உருவாகும் அம்பர் எனப்படுவது வாசனை திரவியங்களின் நறுமணத்தை நீண்ட காலத்திற்கு பராமரிக்க பயன்படுத்தப்படுகின்றது.

இதற்கு உலகில் நல்ல கிராக்கி காணப்படும் நிலையில், இலங்கையில் அதை விற்கவும் வாங்குவதற்கும் தடைவித்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.