கெஹலியவின் கோரிக்கைக்கு சிறைச்சாலை சிறப்பு அனுமதி..!

0
114

வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்திருந்த கோரிக்கைக்கு வெலிக்கடை சிறைச்சாலை அனுமதி வழங்கியுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை

சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

கெஹலியவின் கோரிக்கைக்கு சிறைச்சாலை வழங்கிய சிறப்பு அனுமதி | Welikada Prison Approved Kehaliya Request

இதன்படி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அனுமதியை வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த நிலையில் சிறைச்சாலை திணைக்களம் இந்த அனுமதியை வழங்கி உள்ளது.