62 பந்துகளில் 137 ஓட்டங்கள்: சாதனைப் புத்தகத்தில் பெயரைப் பதித்தார் ஃபின் ஆலன்

0
130

டுனெடினில் புதன்கிழமை (16) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் வெறும் 62 பந்துகளில் 137 ஓட்டங்களை எடுத்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் நியூஸிலாந்து வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்ட கண்டி, பல்லேகலவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் 72 பந்துகளில் 123 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அந்த சாதனையை நேற்றைய ஆட்டத்தில் ஃபின் ஆலன் முறியடித்ததுடன் மட்டுமல்லாது சர்வதேச டி20 இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையினை படைத்த ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜாசாய்யின் சாதனையினையும் நியூஸிலாந்து வீரர் 16 சிக்ஸர்களுடன் சமன் செய்தார்.

ஹஸ்ரதுல்லா ஜாசாய் கடந்த 2019 ஆம் ஆண்டு தேராதூனில் நடைபெற்ற அயர்லாந்துடனான ஆட்டத்தில் 16 சிக்கஸர்களை பெற்றிருந்தார்.

ஃபின் ஆலனின் அதிரடியான துடுப்பட்டம் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாக்கு 224 ஓட்டங்கள‍ை பெற வழி வகுத்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 179 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று பேட்டிகள் கொண்டி டி20 தொடரினை நியூஸிலாந்து 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் நான்காவது ஆட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும்.

Oruvan