பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்!

0
128

பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார். ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பாடி புகழ்பெற்ற ரஷீத் கான், பொலிவுட்டில் பல வெற்றிப் படங்களின் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு கடந்த 2022ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிரபல பாடகர் இனாயத் ஹூசைன் கானின் பேரனான ரஷீத் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவின் பீர்லெஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தன்து 55 வயதில் நேற்று காலமானார். ரஷீத் கானின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று குடும்ப முறைப்படி அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Oruvan