கமலின் “தக் லைஃப்” படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பிக்கவுள்ள படக்குழு

0
147

‘தக் லைஃப்’ (Thug Life) திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் படம் ‘தக் லைஃப்’ (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில் சென்னையில் சேத்துப்பட்டில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Oruvan