பனை மரங்களை இயற்கை கரிம வளமாக (ORGANIC) அறிவித்து வர்தமானி வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை..!

0
603

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வடமாகாணத்துக்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், யாழ்ப்பாணத்தின் தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் உடனான இரவு விருந்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதியிடம் பனை மரங்களை இயற்கை கரிம வழமாக ( ORGANIC) அறிவித்து வர்த்தமானியை வெளிவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் “TAATAS” நிறுவனத்தின் நிறுவுனர் “விக்டர்”இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்தார். மேலும் வடக்குகிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 13 மில்லியனுக்கும் அதிகமான பனைமரங்கள் இருப்பதை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய அவர், இவை மனித தலையீடு இன்றி இயற்கையாக வளருவதால் அவற்றை இயற்கை வழமாக அறிவிப்பதே ( ORGANIC) சிறந்ததென்பதையும் எடுத்துரைத்தார்.


அத்துடன் 2024 ஆம் ஆண்டு உலக சந்தையில் “ORGANIC FOODS“ மொத்த சந்தை மதிப்பீடு 200பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை மேற்கோள் காட்டிய திரு விக்ட்டர், பனை மரங்களை இயற்கை வழங்களாக அறிவித்து வர்த்தகமாணி வெளியிடுவதன் மூலம் உலக சந்தையில் இலகுவாக நம் நாட்டு பனைசார் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார்
மேலும் இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், அந்நியச்செலாவணி உள்வருகையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி செயலகத்தின் விசேட அழைப்பின் பேரில் TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுதர்ஷினி விக்டரும் கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் உரையாடியிருந்தார்.