இயக்குநர் வெங்கட் பிரபு இலங்கையில்… சமூகவலையதளத்தில் வெளியான வீடியோ..!!

0
153

நடிகர் விஜய் தனது 68 ஆவது  திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது கொழும்புக்கு வருகைதந்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் ‘தளபதி 68 ‘ படத்திற்காக கைகோர்த்துள்ளார்.‘தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து ‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளது.படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இதனொரு அங்கமாக இயக்குநர் வெங்கட் பிரபு கொழும்புக்கு வந்து திரைப்பட வேலைகளை ஆரம்பித்துள்ளார்.இது தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.